ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன அவர் எப்படி இறந்தார் அதிர்ச்சி செய்தி.!

ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன அவர் எப்படி இறந்தார் அதிர்ச்சி செய்தி.!

ஸ்ரீதேவி மரணம் குறித்து வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில்வெளியாகும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

மும்பை
திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார். மாலை 5.30 மணி அளவில் தூங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி.

டின்னர்
தூங்கி எழுந்த பிறகு அவர் தனது கணவருடன் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். டின்னருக்கு வெளியே செல்லலாமா என்று போனி கேட்க அவரும் சரியென்று தெரிவித்துள்ளார்.

தயார்
நான் ரெடியாகிவிட்டு வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி வெகுநேரமாகியும் வெளியே வரதாததால் போனி கதவை தட்டியுள்ளார். அப்படியும் கதவை திறக்காததால் அவர் கதவை உடைத்து சென்றுள்ளார்.

நீர்
பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால் பாத்டப்(குளியல் தொட்டி) முழுவதும் நீர் இருக்க அதில் ஸ்ரீதேவி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். ஸ்ரீதேவியை காப்பாற்ற அவர் முயன்றும் முடியவில்லை.

போலீஸ்
உடனே போனி கபூர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஒன்றும் நடக்காததால் இரவு 9 மணி அளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Tags:

Share this post

Post Comment